1.7 தொகுப்புரை

    யாப்பருங்கலக் காரிகையின் வழியில் நின்று, வெண்பா ஆசிரியப்பா ஆகிய இரு பாக்களின் அடி, ஓசை அமைப்புகளை இப்பாடத் தொடக்கத்தில் அறிந்து கொண்டீர்கள். பின்னர் வெண்பாவின் பொது இலக்கணங்களையும், அதன் ஐந்து வகைகளின் இலக்கணங்களையும் எடுத்துக்காட்டுகளின் துணை கொண்டு நன்கு புரிந்து கொண்டீர்கள். அதன்பின் ஆசிரியப்பாவின் இலக்கணங்களையும் அதன் நான்கு வகைகளின் இலக்கணங்களையும் எடுத்துக்காட்டுகளுடன் தெளிவுபடுத்திக் கொண்டீர்கள். உறுப்பியல் இலக்கணத்தில் தெளிவு பெற்று, இந்தப் பாட இலக்கணங்களையும் நன்கு புரிந்து கொண்டீர்களாயின், இப்போது உங்களால் வெண்பாவும் ஆசிரியப்பாவும் படைக்க இயலும். ஆயினும் கவிதை படைக்கக் ‘காரிகைத்துணை’ மட்டும் போதாதே ! கற்பனையும் உணர்வெழுச்சியும் வேண்டுமல்லவா ! அவை ‘கற்பித்து’ வருவன அல்ல. நீங்களே முயன்று அடையவேண்டியவை !

தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1. ஆசிரியப்பாவில் இடம்பெறும் தளைகள் யாவை? விடை
2. ஆசிரியப்பாவின் வகைகள் யாவை? விடை
3. ‘இணைக்குறள் ஆசிரியப்பா’ - பெயர்க்காரணம் தருக. விடை
4. நிலைமண்டில ஆசிரியப்பாவுக்குரிய சிறப்பான ஈறு எது? விடை
5. அடிமறி மண்டில ஆசிரியப்பாவின் அமைப்பைக் கூறுக. விடை