5.3 வைதருப்பம் - காந்தம் ஒன்றைப் புகழ்ந்து கூறும்பொழுது, உலகியல் ஒழுக்கம் மாறுபடாமல் கூறுவது காந்தம் எனப்படும். மனத்தினை மகிழ்விப்பது இதன் இயல்பு எனலாம்.
உலக ஒழுக்கத்தைக் கடந்து செல்லாத உயர்ந்த புகழினை உடையது காந்தம் என்பது இதன் பொருளாகும்.
(நிறை = ஒழுக்க உணர்வு நறுமண மலரின் வாசனையுடன் விளங்கும் கூந்தலும் ஒளிபொருந்திய முகத்தில் காதளவு நீண்டு உலவுகின்ற கண்களும் உடைய பெண் ஒருத்தி, என்னுடைய உள்ளம் வருந்திப் புலம்புமாறும் நிறையும் உணர்வும் ஒருங்கு கெடுமாறும் வந்து நின்றாள் என்பது இதன் பொருளாகும். இதில் உலக வழக்கு மிகாமல் கற்பனையும் கருத்தும் அமைந்தன. உலக இயல்பைக் கடவாததாக இப்பாடற் கற்பனை உள்ளது. காந்தம் என்பது உலக வழக்கிறந்தது என்பார் கௌடர்.
|