1.5 தொகுப்புரை
    தன்மை அணி; எத்தகைய மிகையும் கற்பனையும்இல்லாமல் ஒரு பொருளின் இயல்புகளை உள்ளபடிஅழகுபடுத்திக் கூறுவதாகும். உவமை அணி, பொருளணிகள்எல்லாவற்றிலும் தலைசிறந்தது. பிற அணிகள் பலவும்இதிலிருந்தே தோன்றின; எனவே உவமை அணி தாய் அணிஎனக் கூறப்படும் சிறப்பு வாய்ந்தது. உவமை அணி, 'பண்பு,தொழில், பயன்' ஆகிய ஒப்புமைத்தன்மை காரணமாகத்தோன்றுவது. உவமை அணியிலிருந்து தோன்றிய முதலாவதுஅணி உருவக அணி. இது உவமைக்கும் பொருளுக்கும்இடையே உள்ள வேற்றுமையை ஒழித்து இரண்டும் ஒன்றேஎன்னும் உணர்வு தோன்றுமாறு சொல்வது. தண்டியலங்காரத்தில்கூறப்படாத 'எடுத்துக்காட்டு உவமை அணி' '.ஏகதேச உருவகஅணி' ஆகிய இரண்டும் இப்பாடத்தில் விளக்கப்பட்டுள்ளன.தண்டியலங்காரம் பொருளணியியலில் சொல் அடிப்படையில்அமைந்த சில அணிகளும் இடம் பெறுகின்றன. இத்தகையஅணிகளில் தீவக அணியும் ஒன்று. பாடலில் ஏதேனும்ஓரிடத்தில் நின்ற சொல் அப்பாடலின் பல இடங்களிலும்உள்ள சொற்கேளாடும் சென்று பொருந்திப் பொருள் விளக்கம்தருவது தீவக அணி. இவையாவும் இப்பாடத்தின் வாயிலாகஅறியப்பட்டன.
தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1

உவமை அணியிலிருந்து தோன்றிய முதல்அணி யாது?

விடை
2

உருவக அணியின் இலக்கணத்தைக் கூறுக.

விடை
3

பின்வருவனவற்றுள் உவமைகள் எவை?உருவகங்கள் எவை? தாமரை முகம்,முகத்தாமரை, கைம்மலர், மலர்க்கை.

விடை
4

உருவக உருபுகள் யாவை?

விடை
5

தொகை உருவகம் என்றால் என்ன?

விடை
6

இயைபு உருவகம், இயைபு இல் உருவகம்- இவற்றின் இலக்கணம் தருக.

விடை
7

ஏக தேச உருவக அணி என்றால் என்ன?ஒரு சான்று தந்து விளக்குக.

விடை
8

தீவக அணியின் பெயர்க் காரணம் கூறுக.

விடை