அழகுக் கலைகளில் வாழ்க்கைக்குப்
பெரிதும் பயன்படும்
கட்டடக் கலையின் பல்வகைக் கூறுகளையும், கோட்பாட்டுணர்வுடன்
தெரிந்து கொள்ளும் வகையில் பல செய்திகள் கூறப்பட்டுள்ளன.
பண்டைக்கால ஐந்திணை நிலப் பாகுபாடுகளுக்கு
ஏற்பக்
கட்டடக் கலை தொடங்கிய சூழலும், சிறுகுடிசைகளும், வீடுகளும்
தெருவும், தெருக்கள் கொண்ட நகரமைப்பும் படிப்படியே வளர்ச்சி
பெற்ற செய்திகள் விளக்கப்பட்டன. மதுரையமைப்பை
எடுத்துக்காட்டாகக் கொண்டு இவ்வுண்மை புலப்படுத்தப்பட்டது.
தனிப்பட்டோர்
வீடுகள், அரண்கள், படைக்கலக் கொட்டில், கலங்கரை விளக்கம் முதலிய கட்டடங்கள்
நாட்டுக்குச் சிறப்பினை நல்கக் கூடியவை என்பதும் இப்பாடத்தால் விளங்கியது.
நாட்டு
வளத்திற்காக நீர் மலோண்மையைச் சங்ககால அரசர்கள் மேற்கொண்டமை உணர்த்தப்பட்டது
தன்
மதிப்பீடு : வினாக்கள் - II |
1.
|
தொண்டைமானிடம்
அதியமான் யாரைத் தூது
அனுப்பினான்? |
|
2.
|
கொல்லற்குரிய
கடமையாகப் புறநானூறு
கூறுவது என்ன? |
|
3.
|
முற்காலத்தில்
கலங்கரை விளக்கம் எப்படி
அமைந்திருத்தது? |
|
4.
|
குடபுலவியனார்
நீர் ஆதாரம் பெருக்கக் கூறியவை
யாவை? |
|
5.
|
கல்லணை
கட்டுகையில் பின்பற்றப்பட்ட தொழில்நுட்ப
அடிப்படைத் தத்துவம் என்ன? விளக்குக. |
|
|