1.7
தொகுப்புரை
இன்றைய
இலக்கிய உலகில் சிறுகதைகளுக்கென்று ஒரு தனிஇடம் உண்டு. இலட்சக்கணக்கான
தமிழ் மக்கள் கதை வாசிப்பில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். வானொலி,
திரைப்படம், தொலைக்காட்சி, வீடியோ போன்றவற்றின் வருகையால் கூட மக்கள்
மத்தியில் வாசிப்புப் பழக்கம் சற்றும் குறையவில்லை. அதற்குக் காரணம்
நம் சிறுகதை ஆசிரியர்களின் படைப்புத் திறன் ஆகும். அத்துடன் ஓய்வு
நேரத்தில் மட்டுமன்றிப் பயண நேரத்திலும் படிக்க எளிதாக இருப்பதும்
ஒரு காரணமாகும். இதே காரணத்தினால் தான் நாவலைக் காட்டிலும் சிறுகதை
வாசிப்பு இன்று முன்பை விட அதிகரித்துள்ளது.
தன்
மதிப்பீடு : வினாக்கள் - II |
1
|
பாத்திரங்களின் பெயர்களைக் கொண்ட சிறுகதைகள் இரண்டினை எடுத்துக்காட்டுக.
|
|
2
|
எத்தகைய முடிவால் சிறுகதை வெற்றி பெறும் என்று பெயின் கூறுகின்றார்? |
|
3
|
கல்கியின் நடை எவ்வாறு அமைந்துள்ளது? |
|
4
|
வ.வே.சு. ஐயரின் குளத்தங்கரை அரசமரம்
என்ற கதையில் அமைந்துள்ள நோக்கு நிலை யாது? |
|
5 |
ஸ்டீவன்சன் கூறும் மூவகைக் கதைகள் யாவை? |
|
|