5.4 தொகுப்புரை | ||||||||||||||||
தமிழ்நாடக வரலாறு சுவாமிகளின் வருகைக்குப் பின்னர்த்தான் கண்ணியம் மிக்க வரலாறாக மாறியது. தெருக்கூத்து என்பது நாடகக் கலை என்னும் மாற்றத்தைப் பெற்றது. சுவாமிகள் தமிழ் நாடக உலகின் இமயமலை என்று கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் குறிப்பிட்டது முற்றிலும் பொருத்தமான புகழுரையாகும். தமிழ் நாடக வளர்ச்சி வரலாற்றை வெளிப்படுத்த வேண்டுமானால் சுவாமிகளின் நாடகங்களை மீண்டும் மேடை ஏற்றுவது இன்றிமையாத ஒன்று. சுவாமிகளின் அனைத்து நாடகங்களையும் அச்சேற்றி அழியாமல் பாதுகாப்பது தமிழ் நாடக உலகினரின் தலையாய கடமையாகும். |
||||||||||||||||
|