2.6 தொகுப்புரை


கோவை என்ற சிற்றிலக்கிய வகையில் குறிப்பிடத்தக்க ஒரு நூல் தஞ்சைவாணன் கோவை. சிறந்த இலக்கியத் திறம் வாய்ந்த பொய்யாமொழிப் புலவர் இதைப் படைத்துள்ளார். இது ஒரு சிறந்த அகப்பொருள் கோவை நூல் ஆகும்.

நம்பி அகப்பொருள் என்னும் இலக்கண நூலை அடிப்படையாகக் கொண்டு இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. இதில் அக இலக்கிய மரபுகளும், பாட்டுடைத் தலைவனாகிய தஞ்சைவாணனின் சிறப்புகளும் மிக அழகாகக் காட்டப்பட்டுள்ளன.

இந்நூலின் அமைப்பு, இதில் அக வாழ்க்கை நிகழ்ச்சிகள் கோவையாகப் பாடப்பட்டுள்ள தன்மை, அக இலக்கியத்துக்கே உரிய உள்ளுறை, இறைச்சி முதலிய உத்திகள், தஞ்சைவாணனின் கொடை, நாட்டுச் சிறப்புகள், பொய்யாமொழிப் புலவரின் இலக்கியத் திறன் ஆகியவற்றைப் பற்றி இந்தப் பாடத்தில் நாம் படித்தோம்.

தன்மதிப்பீடு : வினாக்கள் - II

1)
இந்நூலில் இடம்பெறும் அக நிகழ்ச்சிகள் இரண்டைக் கூறுக.
2)
அகப்பொருளுக்கு உரிய உத்திகள் இரண்டை எழுதுக.
3)
தஞ்சைவாணன் பகைவர் ஊரை எவ்விதம் அழித்தான்?
4)
தஞ்சைவாணனின் கொடைச் சிறப்பைக் காட்டும் உவமை ஒன்றைக் கூறுக.
5)
இந்நூலில் இடம்பெறும் ஆறு எது?