திருஉறையூரில் கார்த்திகை
மாதத்தில்
உரோகிணி நட்சத்திரத்தில் அவதரித்தவர்
திருப்பாணாழ்வார். இவர் அருளிய
திவ்வியப் பிரபந்தத்தின் பாசுரப் பகுதி
‘அமலனாதிபிரான்’ என
அழைக்கப்படுகின்றது.
|
|
வயலில் நெற்கதிர்களுக்கு இடையில் குழந்தை
கிடந்ததைப்
பாணர் ஒருவர் கண்டார்; அவர் அக்குழந்தையை வளர்த்து
வந்தார். பாணர் குலத்தில் வளர்ந்ததால் குழந்தை
யாழ்
வைத்துப் பாடுவதில் பயிற்சி பெற்றது.
திருவரங்கத்தானின் திருவடிப்பேற்றில் ஈடுபாடு
கொண்ட
அக்குழந்தை நாளும் இசையோடு இறைவனை வழிபடத்
தொடங்கியது. பாசுரங்களைக் கேட்டு மகிழ்ந்த இறைவன்
'நம்பாடுவான்' என்னும் திருநாமம் சூட்டுகின்றார்.
• முனிவரின்
சினமும் கனவும்
|
காவிரிக்கரை அரங்கனுக்கு வழிபாடு
செய்துவரும்
‘லோகசாரங்க மாமுனிவர்' என்னும் அடியார் துறைக்கு
அருகில் வழியில் திருவரங்கன் சந்நிதியை நோக்கிப் பாடிக்
கொண்டிருக்கும் பஞ்சமன் ஒதுங்கவில்லை என்பதால்
சினமடைகின்றார். வழிவிடவும் எட்டச்
செல்லவும்
கூவுகின்றார்; இதற்குள் ஒருவன் கல்லை
எடுத்துப்
பாணர்மேல் வீசிவிடுகின்றான். அன்று இரவு அரங்கன்
முனிவரின் கனவில் காயத்துடன் காட்சி கொடுக்கின்றார்.
முனிவர் பயந்து நடுங்கிக் காரணம் கேட்க ‘பாணரின்
உள்ளத்தில் இருந்தபோது பட்ட காயம் தான் இது’ எனப்
பதில்சொல்லி அவரைச் சந்நிதிக்கு அழைத்துவரச் சொல்லி
மறைகின்றார்.
மறுநாள் மாமுனிவர் அரங்கன்
இட்ட கட்டளைக்கு
இணங்கித் தமக்கும் வீடு பேறு கிடைத்த
மகிழ்வுடன்
பாணரை வணங்கி அவரைத் தோளில் தூக்கிக் கொண்டு
அரங்கன் சந்நிதியை அடைகின்றார். முனிவரின் தோளில்
சென்று திருமேனியைச் சேவித்த பாணருக்கு ‘முநிவாகனர்’
என்னும் பெயரும் வழங்கி வரலானது.
• தாழ்ந்த
குலமென்று ஏதுமில்லை
|
கதை எப்படியோ? அது உணர்த்தும் செய்தி தாழ்ந்த
குலம்
என்று சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட ஒருவன் அரங்கனின்
திருவருள் பெற எந்தத் தடையுமில்லை. அவனுடைய அடியும்
(கால்களும்) அரங்கனின் கோயிலில் படலாம்;
அவன்
வழிபாடு செய்யலாம் என்பதைத்தான் இக்கதை
வழி
அறிகின்றோம். அனைத்துயிர்களுக்கும் அருள்பாலிக்கும்
திருமாலுக்கு உயர்ந்த குலம் தாழ்ந்தகுலம் என்று ஒன்றுண்டா?
• இறைவன்
திருவடி கண்டதன் பயன்
|
இறைவனின் திருமேனி கண்டது கண்ணுக்குக்
குளுமை;
செவிக்கு விருந்து என ஆழ்வார் ஓதிய பாசுரம் எப்படி
என்பதை எழுத்துவழிக் காண்போமா!
|
அமல
னாதிபிரா னடியார்க்கென்னை
ஆட்படுத்த
விமலன்
|
|
(927)
|
அரங்கனின் கமலம் போன்ற பாதங்கள்
வந்து தம்
கண்ணினுள் புகுந்தன எனப் பாடுகின்றார் பாணாழ்வார்.
அரங்கன் அடியார்க்கும் ஆட்பட்டதாகச் சொல்லும் ஆழ்வார்
வீடுபேறு பெறும் முதிர்ந்த நிலையைத் திருப்பாதம் கண்டதன்
வழிப்புலப்படுத்துகின்றார்.
இறைவனின் திருவடி முதல் கண்கள் வரை மனம் தோய்ந்த
ஆழ்வார் பாதாதிகேசமாக (அடி முதல் முடிவரை) அரங்கன்
பெருமையைப் பாடிப் பறை சாற்றி
நெஞ்சைப்
பறிகொடுக்கின்றார்.
|
பாரமாய
பழவினை பற்றறுத்து என்னைத்தன்
வாரமாக்கி வைத்தான் வைத்ததன்றி யென்னுள்
புகுந்தான்
கோர மாதவம்செய்தனென்கொல்அறியேன்
அரங்கத்தம்மான்திரு
ஆர மார்வது அன்றோ! அடியேனை
யாட் கொண்டதே!
|
|
(931)
|
(பாரம் = சுமை, வாரம் =
அன்பு, ஆரம் = மாலை,
மார்வது = மார்பாகிய அது)
|
செய்ய வாய்: ஐயோ! என்னைச்
சிந்தை
கவர்ந்ததுவே!
|
|
(933:4)
|
|
பெரிய வாய கண்கள் என்னைப்
பேதைமை
செய்தனவே!
|
|
(934:4)
|
|
நீலமேனி ஐயோ!
நிறை கொண்டதென் நெஞ்சினையே! |
|
(935:4)
|
இப்படி இறைவனுள் கரைந்த ஆழ்வார் 10
பாசுரங்களுள்
‘ஐயோ’ என்னும் சொல்லை இருமுறை பெய்து வைத்திருப்பது
அவரின் இறையன்பு கனிந்த நிலையில் இருப்பதைக்
காட்டுவதோடு ஆயிரம் பொருளைத் தருகிறது.
தன் மதிப்பீடு : வினாக்கள் - I
|
கிருஷ்ண அவதாரத்தில் தோய்ந்து
கண்ணனின்
வளர்ச்சி நிலையைத் தம் பாசுரங்களில்
சித்தரித்த ஆழ்வார் திருநாமம் என்ன?
|
|
2. |
பெரியாழ்வார் எந்தச்
சிற்றிலக்கிய வகைக்கு
வித்திட்டவர்? |
|
3. |
தொண்டரடிப் பொடியாழ்வார்
அருளிய
பிரபந்தங்கள் யாவை?
| விடை |
4. |
இராமருக்கு அணில் செய்த
தொண்டு பற்றிப்
பாடிய ஆழ்வாரின் திருநாமத்தை எழுதுக. |
|
5. |
திருமாலுக்கு இசைத்தொண்டு
செய்த
ஆழ்வாரையும், அவர் அருளிச் செயல்களையும்
எழுதுக. |
|
|
|