5.4 தொகுப்புரை
நண்பர்களே!
இதுவரை இதழியல் நடத்தை விதிகளையும்
இதழியல் சட்டங்களையும் அறிந்திருப்பீர்கள். இப்பாடத்தின்
மூலம் தெரிந்து கொண்டவற்றை நினைவுபடுத்திப் பாருங்கள்.
இதழ்களின்
நடத்தை விதிகள் பற்றி அமெரிக்கச் சங்கம் கூறுவதையும், இந்திய இதழியல் மன்றம்
கூறுவதையும் பன்னாட்டு உழைக்கும் இதழாளர் சங்கம் கூறுவதையும் அறிந்து கொள்ளலாம். இந்த நடத்தை விதிகள் ஒவ்வோர் இதழையும் தரமுடையதாக்குகின்றன
-
ஆண்டுகளின் ஏறுவரிசையில் இந்தியாவில் கொண்டு
வரப்பட்ட இதழியல் சட்டங்களைத் தொகுத்து அறியலாம்.
-
விடுதலைக்கு முன்னர், ஆங்கிலேய
அரசால் விடுதலைப்
போராட்டத்தை நசுக்குவதற்காகக் கொண்டுவரப்பட்டது
இந்திய இதழ்கள் சட்டம்
என்பதைச் சட்டங்களின் விளக்கங்கள் நமக்குத் தருகின்றன.
-
விடுதலை இந்தியாவில் வெளியான
இதழியல் சட்டங்கள் இந்திய இதழ்களைத் தரப்படுத்தவும் செம்மையாக்கவும்
வழி வகுக்கின்ற தன்மையைப் புரிந்து கொள்ளலாம்.
இதழியல் நடத்தை
விதிகளும் சட்டங்களும் என்ற
இப்பாடத்தின் மூலம் நல்ல தரமான இதழ்களின் அடிப்படைக்
கூறுகளைப் புரிந்து கொள்கிறோம்.
தன்
மதிப்பீடு : வினாக்கள் - II |
1.
|
‘வாய்ப்பூட்டுச்
சட்டம்’ விளக்குக. |
|
|
நெருக்கடிக் கால
அதிகாரம் உடைய இந்திய
இதழியல் சட்டம் எந்த ஆண்டு
கொண்டு
வரப்பட்டது? விளக்குக.
|
|
3.
|
‘தொழில் முறைப் பத்திரிகையாளர்
சட்டம்’ -
விளக்குக.
|
|
4.
|
பத்திரிகைக் குழுவிற்கு
அதிகாரம் தரும் சட்டம் யாது? |
|
5. |
‘கருப்புச் சட்டம்’
என்றால் என்ன? விளக்கம் தருக. |
|
|