தலைவியின் மீது காதல் கொள்ளும் தலைவன், அவள்
அழகைப்
பார்த்து வியக்கிறான். பலவிதமான ஐயங்கள் வருகின்றன. அவள்
வெளிப்படுத்தும் குறிப்பினால், அவளது உள்ள இயல்புகளை
அறிந்து கொள்ளுகிறான். பின்னர்
அவளது உள் உணர்வுகளையும்
முழுமையாகப் புரிந்து கொள்ளுகிறான். தலைவியின் உள்
உணர்வுகளை உணர்ந்த தலைவன், அவளது ஊடலைத் தணித்து
அவளுக்கு உவகை ஊட்டுகிறான். அவள் மீது எந்த அளவுக்கு
அன்பு கொண்டிருக்கிறான் என்பதையும் புலப்படுத்துகிறான்.
தலைவனின்
பிரிவுக் காலத்தில் பல துன்பங்கள் வந்தாலும்,
அவற்றைப் பொறுத்துக் கொண்டு, அவள் உயிர் வாழ்ந்து
கொண்டிருப்பதற்குக் காரணம் தலைவன் தன்மீது கொண்ட அன்பு
என்று தலைவி கூறுகிறாள். அந்த அளவுக்குத் தலைவி மீது அன்பு
கொண்டவன் தலைவன். பெண்களுக்கு உரிய பெண்மைத் தன்மை
அவளிடம் இருப்பதை அறிந்து பாராட்டிப் பெருமை அடைந்தவன்
தலைவன். இவ்வாறு தலைவனின் பண்பு நலன்கள் பல
காமத்துப்பாலில் இடம் பெற்றுள்ளன.
|