நாடகம் பலவகைகளில் அதன் கூறுகளை வெளிப்படுத்துகிறது.
நடத்திக் காட்டப்படும் கலையாக நாடகம் அமைவதும் இதற்கான
முக்கியக் காரணமாகும் நாடகப் படைப்பு, நாடகப் பண்பு, நாடக
முடிவு, நாடகச்சுவை, நாடகக்கதை, நாடக அளவு போன்ற பல
கூறுகள் நாடகத்துள் ஆளுமை செலுத்துகின்றன. இந்நிலைப்பாடு
நாடக வகைக்கும், வளர்ச்சிக்கும் காரணமாக அமைகிறது. தமிழ்
நாடகத்தின் பன்முக வளர்ச்சியே, தனித்தனி நாடக வகைக்கும்,
அதன்வழி உருவாக்கம் பெறும் நாடகக் கூறுகளுக்கும், தமிழ்
நாடக இலக்கிய வளர்ச்சிக்கும் உந்துதலாக அமைந்துள்ளது
என்பதையே நாடகவகை வரலாறு நமக்குப் புலப்படுத்துகிறது.
|