|
(யாதானும் = எதுவாயினும்; ஆம் = ஆகும்;
சாம் துணையும் = சாகும் வரையிலும்)
கல்வி
கற்றவனுக்கு அவன் செல்லும் நாடு எல்லாம்
சொந்த
நாடாகும், செல்லுகிற ஊர் எல்லாம் அவனது ஊராகும். இதை
அறிந்தும் சாகும் வரையிலும் கல்வி கற்காமலிருக்கிறானே, அதற்குக்
காரணம் என்ன? என்று வினவுகிறார், வள்ளுவர்.
கல்வி
கற்பதற்கு நாளும் கிழமையும் இல்லை. கற்பதற்கு வயது
வரம்பும் இல்லை. எல்லா நாளும் கல்விக்குரிய நாள்களே. எல்லாப்
பருவமும் கல்விக்குரிய பருவங்களே. கல்வியின்
சிறப்பினை
உணரும் எவரும், அதைத்தம் வாழ்நாள் முழுமையும்
பின்
தொடரத் தவறமாட்டார்கள்.
யாதானும்
நாடு ஆகும் ஊர் ஆகும் என்ற உணர்வு தமிழ்ப்
பண்பாட்டின் உயர்ந்த நிலை தானே?
|