5.6 தொகுப்புரை

    நாட்டிய நாடகங்களில் அதிகமாக மேடையேறிய நாட்டிய நாடகமாகக் குறவஞ்சி திகழ்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட குறவஞ்சிப் படைப்புகள் தமிழில் உள்ளன. அது நாட்டுப்புறமும் செவ்வியலழகும் கலந்து விளங்கும் கலையாகும். மக்களின் நம்பிக்கை அடிப்படையில் குறி சொல்லுதலைக் குறியாகக் கொண்டு     பாட்டுடைத்     தலைவனை     வாழ்த்திப்பாடும் இலக்கியமாகும்.

    செவ்வியல் ஆடல்களிலும் குறத்தி ஆட்டமாக இது விளங்குகிறது. மக்களைப் பெரிதும் ஈர்த்து, கலைஞர்களை மகிழ்வித்து, படைப்போர்களின் படைப்பின் நோக்கத்தை நிறைவேற்றித் தரும் வடிவமாகும்.

    சங்ககாலம் முதல் இன்று வரை வாழ்ந்து வரும் குறவஞ்சி, குறமாகவும், குளுவமாகவும்     வளர்ந்தாலும் குறவஞ்சி இலக்கியங்களே பெரும்பாலும் மேடைக்குரிய நாட்டிய நாடகங்களாக விளங்குகின்றன.

    முத்தமிழும் நல்நடையும் பொருந்தி அகப்பொருள் அமைதியோடு அமைந்த இலக்கியமான குறவஞ்சி தமிழர் தம் மொழி உணர்விற்கும், கலை உணர்விற்கும் உரிய நாட்டிய நாடகமாகத் திகழ்கிறது.

தன்மதிப்பீடு : வினாக்கள் - II

1.

கட்டியக்காரன் தோற்றம் பற்றி உரைக்க.

2.

குற்றாலக் குறவஞ்சியின் இடம்பெறும் வஞ்சியின் வருகை பற்றிக் கூறுக.

3.

குற்றாலக் குறவஞ்சியின் தலைவியின் பெயர் என்ன?

4.

தமிழகத்தில் அரங்கேறிய குறவஞ்சி நாட்டிய நாடகங்கள் மூன்றினைக் குறிப்பிடுக.

5.

குற்றாலக் குறவஞ்சி நாட்டிய நாடகத்தை மக்களிடம் பரப்பியவர் யார்?