5.6 தொகுப்புரை |
ஏனியாஸ், இத்தாலியில் ஒரு பேரரசை நிறுவுதற்கு எடுத்துக் கொண்ட முயற்சிகளும், அதற்காக அவன் அனுபவித்த தொல்லைகளும் இக்காப்பியத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. ஜுனோவின் தொல்லைகளை முறியடித்து, அதில் வெற்றி பெற்ற நிகழ்ச்சிகள் நிரல்பட எடுத்துரைக்கப் பட்டுள்ளன. காப்பியம் எவ்வாறு ஒரு கதைக் களஞ்சியமாகவும், சிறந்த உத்திகளைக் கையாண்டுள்ளதாகவும் திகழ்கிறது என்பது எடுத்துரைக்கப் பட்டுள்ளது. ஒவ்வொரு தனிமனிதனின் செயல்களுக்குப் பின்னரும், கடவுளின் செயல்பாடும், விதியின் கட்டுப்பாடும் இருக்கின்றன என்ற மக்களின் நம்பிக்கையையும் இக்காப்பியம் வெளிப்படுத்துகிறது. |
1. |
ஏனியட் எவ்வாறு விதியின் வலிமையைச் சித்திரிக்கிறது? |
விடை |
2. |
ஏனியட்டில் பயணம் எவ்வாறு குறியீடாகத் திகழ்கிறது? |
விடை |
3. |
டிடோ மற்றும் டர்னஸ் பாத்திரங்கள் எவ்வாறு ஏனியாஸின் பாத்திரத்திற்கு எதிர்மறையாக விளங்குகின்றன? |
விடை |
4. |
சோர்வுற்ற ஏனியாஸை அவனது தந்தை எவ்வாறு தேற்றுகிறார்? |
விடை |
5. |
ஏனியட்டின் கதைக்கரு யாது? |
விடை |
6. |
ஏனியாஸ் தன்னலமற்ற மக்கள் தலைவன் என்பதற்குச் சான்று தருக. |
விடை |