|
மரபுக்கவிதை, பிற்காலத்தில் தெம்மாங்கு, சிந்து, கண்ணி
முதலிய சந்தங்களில் பாடப்பட்டுள்ளது. பாரதி மரபுக்கவிதையில்
பல பாடல்கள் பாடியுள்ளார். நடிப்புச் சுதேசிகள் என்ற தலைப்பில் பாரதி, கிளிக்கண்ணிகள் என்ற சந்தத்தில் பாடல் எழுதியிருப்பதை
இங்கே சான்றாகப் பார்க்கலாம்.
கிளிக்கண்ணி என்பது பெண்கள் தினைப்புனம் காக்கச் செல்லும்போது, தினையைக் கிளிகள் உண்ணாதவாறு
வில்லுக்கட்டையில் கல்வைத்து, கிளியை ஓட்டியபடி பாடும்
பாவகை.
பாரதியார் இந்தச் சந்தத்தில் போலிச் சுதேசிகளை எள்ளி
நகையாடிப் பாடுகிறார்.
நெஞ்சில் உரமு மின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை சொல்வாரடி ! - கிளியே
வாய்ச்சொல்லில் வீரரடி... !
|