முதல் பருவம்

நிலை - 1

14.5 பாடி மகிழ்வோம்

பாடம் - 14

கவிமணி தேசிக விநாயகனார்

உடலின் உறுதி

உடலின் உறுதி உடையவரே

உலகில் இன்பம் உடையவராம்

இடமும் பொருளும் நோயாளிக்கு

இனிய வாழ்வு தந்திடுமோ ?

தூய காற்றும் நன்னீரும்

சுண்டப் பசித்தபின் உணவும்

நோயை ஓட்டி விடுமப்பா

நூறு வயது தருமப்பா

- கவிமணி தேசிக விநாயகனார்