இரண்டாம் பருவம்

அகரம்

23.2.1 அறிவோம்

பாடம் - 23

ஒருசொல் பலபொருள்

கயல் மதிநுட்பம் உடையவள்.
இரவில் மதி தோன்றும்.
பள்ளி நான்கு மணிக்கு முடியும்.
வள்ளி முத்துமணி வாங்கினாள்.
திருக்குறள் ஓர் அறநூல்.
ஆடையைத் தைப்பது நூல்.
அன்னம் அழகாய் இருந்தது.
தட்டில் நிறைய அன்னம் இருந்தது.
கந்தன் மாலை வாங்கினான்.
அப்பா மாலை வருவார்.
ரோஜாவின் இதழ் அழகானது.
அழகன் வார இதழ் படித்தான்.