இரண்டாம் பருவம்

அகரம்

27.5 பாடி மகிழ்வோம்

பாடம் - 27

முரசு

வெள்ளை நிறத்தொரு பூனை – எங்கள்

வீட்டிலே வளருது கண்டீர்;

பிள்ளைகள் பெற்றதப் பூனை – அவை

பேருக்கொரு நிறமாகும்;

சாம்பல் நிறமொரு குட்டி – கருஞ்

சாந்து நிறமொரு குட்டி;

பாம்பு நிறமொரு குட்டி – வெள்ளைப்

பாலின் நிறமொரு குட்டி;

எந்த நிறமிருந்தாலும் – அவை

யாவும் ஒரே தரமன்றோ ?

- பாரதியார்