இரண்டாம் பருவம்

அகரம்

27.6 கேட்டல் கருத்தறிதல்

பாடம் - 27

வரையாடு (மலை ஆடு)

தமிழ்நாட்டின் மாநில விலங்கு வரையாடு. இது மலைப்பகுதிகளில் வாழும். வரையாடுகள் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் அதிகமாகக் காணப்படுகின்றன. ஆடுகள் இனத்திலேயே வரையாடுகள் மிகவும் பெரிய உடலமைப்பைக் கொண்டவை. வரையாடுகளின் உணவு புல். இவை காலை அல்லது மாலை நேரங்களில் மட்டும் கூட்டமாக மேயும். பகல் நேரங்களில் பாறை இடுக்குகளில் ஓய்வு எடுக்கும். வரையாடுகள் தம்மை வேட்டையாட வரும் விலங்குகளைத் தொலைவில் இருக்கும்போதே தம் கூரிய பார்வையால் கண்டறியும் தன்மை உடையன. இவை ஆபத்துக் காலத்தில் உரக்க ஒலி எழுப்பித் தம் இனத்திற்கு எச்சரிக்கை செய்யும்.