இரண்டாம் பருவம்

அகரம்

27.3.1 திரும்பப் படிப்போம்

பாடம் - 27

ஆற்றுநீர் பள்ளம் நோக்கிப் பாய்ந்தது.

கவின் செல்லும் வழியில் மேடு இருந்தது.

பறவை மேலே பறந்தது.

பழம் கீழே விழுந்தது.

கூட்டின் உள்ளே குருவி நுழைந்தது.

பாம்பு புற்றிலிருந்து வெளியே வந்தது.

குமரன் மரத்தில் ஏறி நின்றான்.

முத்து ஆற்றில் இறங்கி நின்றான்.

என் பள்ளிக்கு அருகில் பூங்கா உள்ளது.

என் வீடு தொலைவில் உள்ளது.

பிறருக்கு உதவுவது இன்பம் தரும்.

தீய செயல்கள் துன்பம் தரும்.

புதிய சொற்கள்

பெரிய X சிறிய ஏற்றம் X இறக்கம்
புதிய X பழைய குட்டை X நெட்டை
நேர் X எதிர்