இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 6
6.4 தெரிந்துகொள்வோம்

ண, ந, ன ஒலி வேறுபாடு

அலுவலகத்தில் பணி கிடைத்தது.
காலைப்பொழுது பனி நிறைந்தது.
சுவரில் ஆணி அடித்தான்.
தமிழ் மாதங்களுள் ஒன்று ஆனி.
புத்தாண்டில் வாணம் வெடித்தனர்.
வானம் நீல நிறத்தில் இருக்கும்.
அவர்கள் தேநீர் உண்டனர்.
அகிலன் தேனீர் உண்டான்.
பிறருக்கு உதவும் மனம் வேண்டும்.
ஏலக்காய் மணம் வீசியது.
அம்மா பணம் கொடுத்தாள்.
குழந்தைகள் பனம்பழம் உண்கின்றனர்.