இகரம்
(முதல் பருவம்)
கண்ணே! தமிழே! ஓடி வா
காலைப் பூவே! ஓடி வா!
பெண்ணே! சிட்டே! ஓடி வா!
பேசும் நிலவே! ஓடி வா!
அழகே! திருவே! ஓடி வா!
அன்பே! பண்பே! ஓடி வா!
பழமே! தேனே! ஓடி வா!
பாட்டைக் கேட்டே! ஓடி வா!
முத்தே! சுடரே! ஓடி வா!
முகிலே! மழையே! ஓடி வா!
சொத்தே! சுகமே! ஓடி வா!
சுனையே! பொழிலே! ஓடி வா!
-வயலூர் சண்முகம்