இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 10
10.4 தெரிந்துகொள்வோம்

ர, ற ஒலிவேறுபாடு

பறவை உயரே பறந்தது
பரவையில் படகு மிதந்தது
மரம் நிழல் தரும்
மறம் வெற்றி தரும்
தம்பிக்கு அரைப்பழம் கொடு
நான் படிக்கும் அறை
விளக்கு சுடர்விட்டு எரிந்தது
வெண்ணிலா ஈட்டி எறிந்தாள்
மெரினா அழகிய கடற்கரை
சட்டையில் கறை உள்ளது
பொரிஉருண்டை சுவையாக இருக்கும்
பொறிக்குள் எலி சிக்கியது

பொருள் அறிவோம்

1. பறவை - பறக்கும் உயிரினம்
2. பரவை - கடல்
3. மரம் - தாவரம்
4. மறம் - வீரம்
5. அரை - பாதி
6. அறை - வீட்டின் பகுதி
7. எரி - தீ எரிதல்
8. எறி - வீசு
9. கரை - கடற்கரை
10. கறை - அழுக்கு
11. பொரி - உணவுப்பொருள்
12. பொறி - இயந்திரம்