இகரம்
(இரண்டாம் பருவம்)
வீட்டிற்கு வருகைதரும் உறவினரை வரவேற்றல், இனிமையாகப் பேசுதல், உணவு அளித்து மகிழ்தல் ஆகிய செயல்களை விருந்தோம்பல் என்கிறோம். விருந்தோம்பும் பண்பு, நாட்டுக்கு நாடு வேறுபடும். தமிழர்களின் விருந்தோம்பும் பண்பு சிறப்பானது. முகத்தில் சிறிது கடுமையைக் கண்டாலே, விருந்தினர் மனம் வருந்துவர் என்பதை நன்கு உணர்ந்தவர்கள் தமிழர்கள். ஆகையால், இன்முகத்துடன் விருந்தினர்களை வரவேற்பர். அவர்களுக்குக் குடிக்கத் தண்ணீர் தருவர். பின்னர், வாழை இலையில் அறுசுவை உணவு வைத்து உண்ணுமாறு வேண்டுவர். வாழை இலையின் இடப்பக்கத்திற்கு மேலே உப்பு, இனிப்பு, கூட்டு, பொரியல், வறுவல், அப்பளம் வைப்பர். கீழ்ப்பகுதியில் சோறு, பருப்பு, நெய், குழம்பு, ரசம், பாயாசம், மோர் ஆகியவற்றைத் தேவையறிந்து பரிமாறுவர். உணவு உண்ட பின்னர், கை கழுவ நீர் தருவர். இறுதியாக வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு ஆகிய மூன்றும் கலந்து தருவர். உண்ட உணவு செரிப்பதற்கு இது பயன்படும். உறவினர்களுடன் இனிமையாகப் பேசி மகிழ்வர். அவர்கள் புறப்படும்போது வாசல்வரை சென்று வழியனுப்புவர்.
1. | விருந்தினர் | - | வீட்டிற்கு வருகைதருபவர் | |
2. | ஓம்பல் | - | வரவேற்றுப் பணிவிடை செய்தல் | |
3. | இன்முகம் | - | இனிய முகம் | |
4. | அறுசுவை | - | இனிப்பு, புளிப்பு, கசப்பு, கார்ப்பு, உவர்ப்பு, துவர்ப்பு |
வீட்டிற்கு வருகைதரும் உறவினரை வரவேற்றல், இனிமையாகப் பேசுதல், உணவு அளித்து மகிழ்தல் ஆகிய செயல்களை விருந்தோம்பல் என்கிறோம்.
உபசரிப்பவரின் முகத்தில் சிறிது கடுமையைக் கண்டாலே, விருந்தினர் மனம் வருந்துவர்.
வாழை இலையின் இடப்பக்கத்திற்கு மேலே உப்பு, இனிப்பு, கூட்டு, பொரியல், வறுவல், அப்பளம் வைப்பர். கீழ்ப்பகுதியில் சோறு, பருப்பு, நெய், குழம்பு, ரசம், பாயாசம், மோர் ஆகியவற்றைத் தேவையறிந்து பரிமாறுவர்.