இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 17
17.4 தெரிந்துகொள்வோம்

வேற்றுமை (1 – 4)

பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமை. இது எட்டு வகைப்படும். அவற்றுள் முதல் வேற்றுமை முதல் நான்காம் வேற்றுமை வரை இப்பகுதியில் படிப்போம்.

முதல் வேற்றுமை (எழுவாய்)

வேற்றுமை உருபு எடுத்துக்காட்டு
எழுவாய்
மகிழன் வரைந்தான்.
பறவைகள் பறக்கின்றன.

இரண்டாம் வேற்றுமை (செயப்படு பொருள்)

வேற்றுமை உருபு எடுத்துக்காட்டு
நீங்கள் திருக்குறளைப் படித்தீர்கள்.
ஆனந்தி பூச்செடிகளை வளர்த்தாள்.

மூன்றாம் வேற்றுமை (கருவி)

வேற்றுமை உருபு எடுத்துக்காட்டு
ஆல்
நான் ஊசியால் துணி தைத்தேன்.
வேற்றுமை உருபு எடுத்துக்காட்டு
ஒடு
வளவன் தன் நண்பனொடு வந்தான்.
சொல் உருபு எடுத்துக்காட்டு
ஓடு
நீ நண்பனோடு விளையாடினாய்.
உடன்
தந்தையுடன் மகன் சென்றான்.
கொண்டு
நான் எழுதுகோல் கொண்டுஎழுதினேன்.

நான்காம் வேற்றுமை (கருவி)

வேற்றுமை உருபு எடுத்துக்காட்டு
கு
அண்ணன் வீட்டுக்கு வந்தேன்.
சொல் உருபு எடுத்துக்காட்டு
பொருட்டு
மழையின் பொருட்டு விடுறை.
நிமித்தம்
வேலை நிமித்தம் ஊருக்குச் சென்றான்.
ஆக
நூலகத்திற்காகப் புத்தகம் வாங்கினாள்.