இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 19
19.2 படிப்போம்

சக்கரம்

மக்களின் வாழ்வில் புரட்சியை எற்படுத்திய ஒரு கருவி, சக்கரம். ஒரு பொருளை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு செல்ல, சக்கரம் உதவுகிறது. மண்பாண்டப் பொருள்கள் சக்கரங்களைக் கொண்டே உருவாயின. தற்போது பெரிய தொழிற்சாலைகளிலும் நவீன இயந்திரங்களிலும் வேலை நடைபெறச், சக்கரங்கள் உதவுகின்றன. போக்குவரத்து வளர்ச்சிக்குச் சக்கரங்கள் மிகவும் தேவை. தரையில் செல்லும் மிதிவண்டிமுதல் வானில் பறக்கும் விமானம்வரை சக்கரங்கள் பயன்படுகின்றன. மரம், உலோகம், ரப்பர் ஆகியவற்றால் சக்கரங்கள் உருவாக்கப்படுகின்றன. சிறுவர்களின் விளையாட்டுப் பொருள்களிலும் சக்கரங்கள் உள்ளன. அன்றாட வாழ்வில் நம்முடைய செயல்களைச் சக்கரங்கள் மிகவும் எளிதாக்குகின்றன.

பொருள் அறிவோம்

1. புரட்சி - எதிர்பாராத மாற்றம்
2. மண்பாண்டம் - மண்ணைக் குழைத்துச் செய்யப்படும் பொருள்
3. நவீன இயந்திரம் - புதுமையான கருவி
4. அன்றாடம் - நாள்தோறும்

விடை காண்போம்

சக்கரம்

ஒரு பொருளை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு செல்ல, சக்கரம் உதவுகிறது.

மரம், உலோகம், ரப்பர் ஆகியவற்றால் சக்கரங்கள் உருவாக்கப்படுகின்றன.

மிதிவண்டி, மகிழுந்து, பேருந்து, மாட்டு வண்டி

இரண்டு சக்கரங்கள்