இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 19
19.3 பாடி மகிழ்வோம்

நிலா

வட்ட வட்டத் தட்டு நிலா

வானத்திலே மிதக்கும் நிலா

எட்டிஎட்டி மேகத் திரையில்

என்னைப் பார்க்கும் தங்க நிலா

பொட்டுப் போலத் தோன்றும் நிலா

பொங்கும் பாலைப் போன்ற நிலா

முல்லைப் பூவைப் போன்ற வெள்ளை

முத்துச்சுடரை வீசும் நிலா

எல்லை யில்லா வீதி வழியே

இன்ப மாகப் போகும் நிலா.

- பெ.தூரன்