இகரம்
(இரண்டாம் பருவம்)
ஐந்தாம் வேற்றுமை (நீங்கல்)
| வேற்றுமை உருபு | சொல் உருபு | எடுத்துக்காட்டு |
|---|---|---|
| இன் | - | மலையின் வீழ் அருவி. |
| இன் | நின்று | மரத்தினின்று விழுந்த மலர்கள். |
| இல் | - | அழகில் சிறந்தது மயில். |
| இல் | இருந்து | வீட்டிலிருந்து பள்ளிக்குச் சென்றான். |
ஆறாம் வேற்றுமை (உடைமை)
| அது | - | எனது புத்தகப்பை அழகானது. |
| - | உடைய | முகிலனுடைய அப்பா சிறந்த பேச்சாளர். |
ஏழாம் வேற்றுமை (இடம்)
| கண் | - | மரத்தின்கண் பாம்பைக் கண்டேன். |
| - | முன் | வீட்டின் முன் நாய் குரைத்தது. |
| - | மேல் | கூரையின் மேல் சேவல் கூவியது. |
எட்டாம் வேற்றுமை (விளி)
| - | - | நண்பா, படம் பார்க்கலாமா? |
| - | - | அரசே, பொருள் தந்து உதவுங்கள். |