இகரம்
(இரண்டாம் பருவம்)
‘நிலா. நிலா ஓடிவா!
நில்லாமல் ஓடி வா!’
பல காலம் இப்படிப்
பாடிப் பயன் இல்லையே!
மலை மேலே ஏறிநீ
வருவாய் என்றே எண்ணினோம்
மல்லி கைப்பூக் கொண்டுநீ
தருவாய் என்றும் பாடினோம்
எத்தனை நாள் பாடியும்
ஏனோ நீயும் வரவில்லை
சத்தம் போட்டுப் பாடியும்
சற்றும் நெருங்கி வரவில்லை
உன்னை விரும்பி அழைத்துமே
ஓடி நீ வராததால்
விண்க லத்தில் ஏறியே
விரைவில் வருவோம் உன்னிடம்!
- அழ. வள்ளியப்பா