இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 24
24.3 பாடி மகிழ்வோம்

பாப்பா படி

பாப்பா பாப்பா படி !

பாட்டும் கதையும் படி!

 

அம்மா சுட்டாள் தோசை!

அதன்மேல் இல்லை ஆசை!

 

பாட்டும் கதையும் வேண்டும்!

படிப்பே அறிவைத் தூண்டும்!

 

விளக்கே இருளைப் போக்கும்!

வெளிச்சம் எங்கும் சேர்க்கும்!

 

படிப்பே மடமை ஓட்டும்!

பரந்த அறிவைக் கூட்டும்!

 

பாப்பா பாப்பா படி!

பணிவும் அன்பும் படி!

- பெருஞ்சித்திரனார்