இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 25
25.3 பாடி மகிழ்வோம்

உழவுப்பாடல் – களை பறித்தல்

அத்திமரம் அகி லகிலா

அத்திமரம்

அளவு பாத்து ஐலப்பிடி

அறுக்கித் தள்ளு அகி லகிலா

அறுக்கித் தள்ளு

குளத்துக் குள்ளே ஏலே லோ

கொய்யாமரம் அகி லகிலா

கொத்தித் தள்ளு

நாத்துக்குள்ளே ஏலே லோ

நச்சுப் புல்லு அகி லகிலா

நச்சுப்புல்லு

நச்சுப்புல்லை ஐலப்பிடி

நறுக்கித் தள்ளு அகி லகிலா

நறுக்கித் தள்ளு

- நாட்டுப்புறப் பாடல்