இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 27
27.3 பாடி மகிழ்வோம்

எனது ஆசை!

காற்றில் பாய்ந்து செல்லுவேன்

கடலும் மலையும் தாண்டுவேன்

ஆற்று வெள்ளம் தன்னையே

அணைகள் கட்டித் தேக்குவேன்

பாட்டும் கலையும் பயிலுவேன்

பசியும் பிணியும் போக்குவேன்

நாட்டின் செல்வம் ஓங்கவே

நல்ல பணிகள் ஆற்றுவேன்

- பெ. தூரன்