உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 4
படைப்பாற்றல் வளர்ப்போம் & செயல்திட்டம்

4.10 படைப்பாற்றல் வளர்ப்போம்

கதையைப் படித்துப் பொருத்தமான தலைப்பு தருக.

 

பெரிய ஆலமரம். அந்த ஆலமரத்தின் அடியில் அமர்ந்து ஊரிலுள்ள பெரியவர்கள் ஓய்வு எடுத்தனர். குழந்தைகளும் அங்கு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கு விளையாடிக்கொண்டிருந்த பூங்கொடி கால் தடுக்கி விழுந்துவிட்டாள். அதனைக் கண்ட அவளுடைய நண்பர்களான தேன்மொழியும் இளவரசியும் அவளைத் தூக்கி அவளுக்கு உதவி செய்தனர். ஆனால் தமிழ்ச்செல்வி மட்டும் பூங்கொடி விழுந்ததைப் பார்த்துப்பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தாள். உடனே அங்கிருந்த பாட்டி ஒருவர் அவர்களுக்குப் ‘பிறர் வலியினைக் கண்டு நாம் மகிழக் கூடாது’ என்று கூறினார். அதனைக் கேட்ட தமிழ்ச்செல்வி, பூங்கொடியிடம் வந்து மன்னிப்புக் கேட்டாள். மீண்டும் அனைவரும் இணைந்து விளையாடினர்.

4.11 செயல்திட்டம்

உம் பாடப்பகுதியிலுள்ள ‘வீரச்சிறுவன்’ படக்கதையைக் காணொலியாகத் தயாரித்து வருக.