உகரம்
(முதல் பருவம்)
|
கல்லணை தமிழ்நாட்டில் உள்ள பழைமை வாய்ந்த அணையாகும். கரிகாலன் என்ற சோழ மன்னனால் கி.பி. முதலாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தற்போதுள்ள அணைகளில் கல்லணையே மிகப்பழமையானது எனவும், தற்போதும் பயன்பாட்டில் உள்ளது எனவும் அறியப்படுகிறது. மணலில் அடித்தளம் அமைத்து கல்லணையைக் கட்டிய பழந்தமிழர் தொழில்நுட்பம் இன்றுவரை வியத்தகு சாதனையாகப் புகழப்படுகிறது. கல்லணையின் நீளம் 1,079 அடி, அகலம் 66 அடி மற்றும் உயரம் 18 அடியாகும். இது நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது. கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு 1900 ஆண்டுகளுக்கு மேலாகக் காவிரி வெள்ளத்தை தடுத்து நிறுத்தி வருவது வியப்பே ஆகும். |
|