உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 9
9.3 தெரிந்துகொள்வோம்

ஒரு சொல் பல பொருள்

ஓடு
வீட்டின் ஓடு

ஓடினான்
பட்டம்
பட்டம்

பட்டம் பெற்றான்
அணை
அணை

அணைத்தல்
அலை
கடல் அலை

அலைந்தான்
அடி
அடித்தல்

அடிமேல் அடி வைத்து நடந்தான்

சுவைச்செய்தி

‘வீட்டில் ஒரு நூலகம்’ என்பது பலருக்கும் கனவு. ஆனால், ‘புத்தகங்களுக்காக ஒரு வீடு’ என்று ஏங்கிய மனிதர் அண்ணல் அம்பேத்கர். ஒரு நாளில் பதினெட்டு மணி நேரத்தைக் கற்பதற்காகவே செலவிட்டார். இப்படி ஓய்வின்றிப் படிக்கும் பழக்கம் கொண்ட அம்பேத்கரிடம் அவரின் நண்பர், ‘இப்படிச் சலிப்படையாமல் வாசிக்கிறீர்களே, நீங்கள் இளைப்பாறவே மாட்டீர்களா?’ என்று கேட்டார். அதற்கு அம்பேத்கர் தனக்கு இளைப்பாறுதல் என்பது, “ஒரு தலைப்பு கொண்ட புத்தகத்திலிருந்து வேறு ஒரு வகையான, முற்றிலும் மாறான ஒரு புத்தகத்துக்கு மாறுவதுதான்” என்றார்.

அண்ணல் அம்பேத்கர்