உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 12
12.3 தெரிந்துகொள்வோம்

மரபுத்தொடர்கள்

அப்பா : வர்ஷா! உன்னைப் படிக்கச் சொன்னேன் அல்லவா? எங்கே கம்பி நீட்டுகிறாய்?
வர்ஷா : நான் வேகமாகப் படித்துவிட்டேன் அப்பா.
அப்பா : வேகமாகப் படித்துவிட்டாயா? நுனிப்புல் மேயக்கூடாது வர்ஷா.
வர்ஷா : அப்படியெல்லாம் இல்லை அப்பா. பாடங்களை நான் மனப்பாடம் செய்துவிட்டேன்.
அப்பா : வெறும் மனப்பாடம் செய்தல் கூடாது வர்ஷா. பொருள் அறிந்து படிக்க வேண்டும். அப்படிப் படிப்பதே உன் வாழ்வின் வெற்றிக்குக் கைகொடுக்கும்.
வர்ஷா : சரி அப்பா! அப்படியே படிக்கிறேன்.
கம்பி நீட்டுதல் - யாருக்கும் தெரியாமல் நழுவுதல்
நுனிப்புல் மேய்தல் - மேலோட்டமாகப் படித்தல்
கைகொடுக்கும் - உதவும்

தகவல் துளி

உலக வர்த்தக அமைப்பானது (WTO). ஒரு சர்வதேச நிறுவனம் ஆகும். இது 1995ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் செயல்படத் தொடங்கியது. இதில் பங்குபெறும் நாடுகளிடையே நிகழும் வணிகத்தை வணிக உடன்பாடுகள், உலக வர்த்தக மாநாடுகள், பேச்சு வார்த்தை மூலம் முறைப்படுத்துகிறது. இந்நிறுவனத்தின் தலைமைச் செயலகம் சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள ஜெனீவா, நகரத்தில் உள்ளது.