உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 19
19.3 தெரிந்துகொள்வோம்

பெயரெச்ச வகைகள்

தெரிநிலைப் பெயரெச்சம்
செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறினையும் வெளிப்படையாகக் காட்டுவது தெரிநிலைப் பெயரெச்சம்.
(எ.கா.) எழுதிய மாணவன்

குறிப்புப் பெயரெச்சம்
காலத்தையோ செயலையோ உணர்த்தாமல் பண்பினை மட்டும் உணர்த்தி, காலத்தைக் குறிப்பாக உணர்த்துவது குறிப்புப் பெயரெச்சம்.
(எ.கா.) நல்ல மாணவன்