உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 20
20.3 தெரிந்துகொள்வோம்

இரட்டுறமொழிதல் (சிலேடை)

இருபொருள் தரும்படி கூறுவது இரட்டுற மொழிதல் ஆகும். இது சிலேடை எனவும் அழைக்கப்படும்.


அந்தமானைப் பாருங்கள் ! என்னே அழகு !

அந்தமானைப் பாருங்கள் ! என்னே அழகு !

குறிஞ்சி நிலத்தில் மலைத்தேன்

குறிஞ்சி நிலத்தில் மலைத்தேன்

மேசைக்குத் தேவை பலகை

ஒற்றுமைக்குத் தேவை பல கை

சமையலுக்கு உதவுவது பெருங்காயம்

கீழே விழுந்தால் ஏற்படுவது பெருங்காயம்