உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 23
23.3 தெரிந்துகொள்வோம்

வேற்றுமை

பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது வேற்றுமை. அஃது எட்டு வகைப்படும். முதல் வேற்றுமைக்கும் எட்டாம் வேற்றுமைக்கும் உருபு இல்லை. மற்ற உருபுகள் ஐ, ஆல், கு, இன், அது, கண் என்பன.


எழிலன் பார்த்தான்

எழிலனைப் பார்த்தான்.

கண்ணன் தந்தான்

கண்ணனுக்குத் தந்தான்.

கை கழுவினான்

கையால் கழுவினான்.