உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 24
படைப்பாற்றல் வளர்ப்போம் & உயர்நிலைத்திறன் & செயல்திட்டம்

24.10 படைப்பாற்றல் வளர்ப்போம்

எதிர்ச்சொற்களைக்கொண்டு பின்வருமாறு தொடர்கள் உருவாக்குக.

காலையில் படி மாலையில் ஆடு

இன்சொல் பேசு வன்சொல் தவிர்

நன்மை செய் தீமை விலக்கு

24.11 உயர்நிலைத்திறன்

பின்வரும் குறிப்புச் சொற்களைக்கொண்டு உரைப்பகுதி உருவாக்குக.

தொலைக்காட்சி – கண்டுபிடித்தவர் – ஜான் லோகி பைர்டு – பொழுதுபோக்குக் கருவி – ஒளி ஒலி – நன்மைகள் – திரைப்படக் காட்சிகள் – விளம்பரங்கள் – அறிவிப்புகள் – கல்வி நிகழ்ச்சிகள் – தீமைகள் – பார்வைக் குறைபாடு – படிப்பில் ஆர்வம் குறைவு – தேவைக்கேற்றவாறு பயன்படுத்துதல்.

24.12 செயல்திட்டம்

உலகில் அமைதி வழியில் போராடியவர்களுள் ஒருவரைப் பற்றி நழுவம் (PowerPoint) ஒன்றினை உருவாக்குக.