ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 3
படைப்பாற்றல் வளர்ப்போம் & உயர்நிலைத்திறன் & செயல்திட்டம்

3.10 படைப்பாற்றல் வளர்ப்போம்

கீழ்க்காணும் கதையைப் படித்துத் தொடர்ந்து கூறுக.

பொம்மைக்கண்காட்சியைக் காண அம்மாவுடன் செல்கிறாள் மீனா. ஒவ்வொரு கடையிலும் அழகழகான பொம்மைகள். அந்தப் பொம்மை வேண்டும் இந்தப் பொம்மை வேண்டும் என்று அடம்பிடிக்கிறாள் மீனா. அம்மா சமாதானம் செய்கிறாள். ஆனால், மீனா கேட்பதாக இல்லை. அம்மாவின் கையைவிட்டுத் தனியாக ஒரு கடைக்குள் சென்றுவிடுகிறாள். மீனா, மீனா என்று அம்மா கதறுகிறாள். அப்போது, மீனாவின் அருகில் ஒரு பெண் வருகிறாள் ……….

3.11 உயர்நிலைத்திறன்

பின்வரும் படத்திற்குப் பொருத்தமான வினாக்கள் உருவாக்குக.

(ஏன் / எவ்வாறு / எப்படி / எங்கு / யார்)

3.12 செயல்திட்டம்

உலக அமைதிக்காக உழைத்த மாமனிதர் ஒருவர் பற்றிய தகவல்களைத் திரட்டித் தொகுப்பேடு உருவாக்குக.