ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 6
6.3 தெரிந்து கொள்வோம்

நிறுத்தற்குறிகள்

காற்புள்ளி

வினாக்குறி

அரைப்புள்ளி

வியப்புக்குறி

முக்காற்புள்ளி

ஒற்றை மேற்கோள்குறி

முற்றுப்புள்ளி

இரட்டை மேற்கோள்குறி

காற்புள்ளி

1. பெயர்கள் அடுக்கிவரும்போது
(எ.கா.) கபிலன், மாறன், புகழேந்தி மூவரும் பரிசு பெற்றனர்.

2. விளிப்பெயர்களின் பின்
(எ.கா.) ஆசிரியர்களே, மாணவர்களே, வணக்கம்.

3. தொகுத்தோ, பிரித்தோ கூறும்போது
(எ.கா.) ஆகவே, நாம் எடுக்கும் முடிவே இறுதியானது.

4. மேற்கோள் குறிகளுக்குமுன்
(எ.கா.) கவின் தன் அம்மாவிடம், “நீங்கள் கூறியபடி செய்கிறேன்” என்றான்.

அரைப்புள்ளி

1. ஒரு தொடர் தொடர்ச்சியாக வரும்போது
(எ.கா.) இளமதி நன்கு படித்தாள். தேர்ச்சி பெற்றாள். பாராட்டப்பட்டாள்.

2. ஒரே தொடரில் வேறுபட்ட கருத்துகள் வரும்போது
(எ.கா.) வேல்விழி நன்கு ஆடுவாள். ஆனால், பாடுவாள் எனக் கூற இயலாது.

முக்காற்புள்ளி

1. ஒரு கூற்றை எடுத்துக் கூறும்போது
(எ.கா.) ஔவையார் கூறுகிறார். அறம் செய விரும்பு.

2. பல பொருள் அல்லது செய்தி கொண்ட பட்டியல் வரும்போது
(எ.கா.) அறுசுவையாவன: இனிப்பு, புளிப்பு, கசப்பு, கார்ப்பு, துவர்ப்பு, உவர்ப்பு.

முற்றுப்புள்ளி

1. ஒரு தொடர் முடியும்போது
(எ.கா.) நாள்தோறும் உடற்பயிற்சி செய்வது உடலுக்கு நல்லது.

2. சொற்சுருக்கம் வரும்போது
(எ.கா.) முகிலன் மாண்ட்ஃபோர்ட் உ.நி.பள்ளியில் படிக்கிறான்.

வினாக்குறி

1. வினாப்பொருள் தரும் தொடர் வரும்போது
(எ.கா.) உன் பெயர் என்ன?

வியப்புக்குறி

1. ஒரு தொடரில் உணர்ச்சி வெளிப்படும்போது
(எ.கா.) ஆ! நான் உழைத்ததெல்லாம் வீணாகப் போயிற்றே!

2. வரவேற்றல், வாழ்த்தல், வைதல் ஆகிய பொருள்களில் வரும்போது
(எ.கா.) சான்றோரே வணக்கம்! அரசே, நீடூழி வாழ்க! ஆணவம் அழிக!

ஒற்றை மேற்கோள்குறி

1. நேர்கூற்றாக வரும்போது
(எ.கா.) கண்ணன் தன் நண்பனிடம் நாம் படித்த கதை, ‘ஆழமறியாமல் காலை விடாதே என்று அறிவுறுத்துவதுபோல் இருக்கிறது’ என்று கூறினான்.

இரட்டை மேற்கோள்குறி

1. பிறர் கூற்றைக் கூறும்போது
(எ.கா.) பாரதியார், “ஓடி விளையாடு பாப்பா” என்றார்.