ழகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 17
17.3 தெரிந்துகொள்வோம்

அ) தெரிநிலைப் பெயரெச்சம்

பெயரைச் சார்ந்து முடியும் எச்சம் செயலையும் காலத்தையும் உணர்த்தினால் அது தெரிநிலைப் பெயரெச்சம் எனப்படும்.

தெரிநிலைப் பெயரெச்சம்
உடன்பாடு
எதிர்மறை
ஈறுகெடாத எதிர்மறை
ஈறுகெட்ட எதிர்மறை

இறுதி எழுத்து மறையாமல் வருவது, ஈறுகெடாத எதிர்மறைப் பெயரெச்சம்.
இறுதி எழுத்து மறைந்து வருவது, ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்.
(ஈறு – இறுதி எழுத்து; கெடாத – மறையாத)

உடன்பாட்டுப் பெயரெச்சம் ஈறுகெடாத எதிர்மறைப் பெயரெச்சம் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

ஓடிய குதிரை

ஓடாத குதிரை

ஓடாக் குதிரை

பாடிய பெண்

பாடாத பெண்

பாடாப் பெண்

இயங்கிய பேருந்து

இயங்காத பேருந்து

இயங்காப் பேருந்து

உடன்பாட்டுப் பெயரெச்சம்

ஓடுகிற குதிரை
பாடும் பெண்

வாடிய மலர்
ஈறுகெடாத எதிர்மறைப் பெயரெச்சம்

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

ஓடா குதிரை

ஓடாக் குதிரை

பாடா பெண்

பாடாப் பெண்

இயங்கா பேருந்து

இயங்காப் பேருந்து

அழா குழந்தை

அழாக் குழந்தை

ஆ) குறிப்புப் பெயரெச்சம்

காலத்தையோ செயலையோ உணர்த்தாமல் பண்பை மட்டும் உணர்த்துவது, குறிப்புப் பெயரெச்சம் ஆகும்.

பெரிய மலை

புதிய வீடு

அழகிய ஓவியம்

நல்ல பையன்