ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 30
30.3 மொழிக்கூறு

ஆறு சொல் கொண்ட தொடர்கள்

எங்கள் பள்ளியில் ஆண்டுவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

நான் என் நண்பர்களுடன் நவீனத் திரையரங்கத்திற்குச் சென்றேன்.

குயவர் மண் பானையை மிகவும் அழகாகச் செய்தார்.

மேலைநாட்டினர் தமிழ்மொழியை ஆங்கில மொழியோடு ஒப்பிட்டுக் கற்கின்றனர்.