சிகரம்
(முதல் பருவம்)

பாடம் - 1
1.4 தெரிந்துகொள்வோம்

மொழிமுதல் எழுத்துகள்

சொல்லுக்கு (மொழிக்கு) முதலில் வரும். அதாவது ஒரு சொல்லில் முதல் எழுத்தாக இடம்பெறும் எழுத்துகள் மொழிமுதல் எழுத்துகள்.
சான்று : அண்ணன், காடு, கடல், மீன், இவற்றில் முறையே அ, கா, க, மீ ஆகியவை மொழிமுதல் எழுத்துகளாகும்.
க் (கா – க் + ஆ) : (க – க் + அ) : ம் (மீ – ம் + ஈ)

மொழிமுதல் உயிரெழுத்துகள்:

உயிரெழுத்துகள் பன்னிரண்டும் மொழிக்கு முதலில் வரும்.

எ.கா:

ம்மா லி
டு ணி
லை ந்து
ட்டி ன்று
டை டு
ர் வை

மொழிமுதல் மெய்யெழுத்துகள்:

மெய்யெழுத்துகளுள் க், ங், ச், ஞ், த், ந், ப், ம், ய், வ் ஆகிய பத்து மட்டுமே மொழிக்கு முதலில் வரும். மெய்யெழுத்துகள் தனித்து மொழிக்கு முதலில் வருவதில்லை. உயிரெழுத்துகளுடன் சேர்ந்தே வரும்.

க், த், ந், ப், ம் ஆகிய ஐந்தும் உயிரெழுத்து பன்னிரண்டுடனும் சேர்ந்து மொழிக்கு முதலில் வரும்.

ங், ச், ஞ், ய், வ் ஆகிய ஐந்தும் சில உயிரெழுத்துகளோடு மட்டும் சேர்ந்து மொழிக்கு முதலில் வரும்.

ஙகர மெய்யெழுத்து:

’ங்’ என்னும் மெய்யெழுத்து ’அ’ என்னும் உயிரெழுத்தோடு மட்டும் சேர்ந்து மொழிக்கு முதலில் வரும்.

எ.கா:

ஙனம் (விதம்)

சகர மெய்யெழுத்து:

’ச்’ என்னும் மெய்யெழுத்து அ, ஐ, ஔ ஆகிய உயிர் எழுத்துகளுடன் சேர்ந்து வராது. ஆனால் தற்போது சங்கு, சக்கரம் போன்ற சொற்கள் வழக்கில் உள்ளன.

ஞகர மெய்யெழுத்து:

’ஞ்’ என்னும் மெய்யெழுத்து அ, ஆ, எ, ஒ ஆகிய நான்கு எழுத்துகளுடன் மட்டுமே வரும்.

எ.கா:

மலி ஞா ஞாஞாயிறு
ஞெ ஞெகிழி ஞொ ஞொள்ளுதல்

யகர மெய்யெழுத்து:

’ய்’ என்னும் மெய்யெழுத்து அ, ஆ, உ, ஊ, ஓ, ஒள ஆகிய உயிர் எழுத்துகளுடன் மட்டுமே வரும்.

எ.கா:

வனர் யூ யூகி
யா யானை யோ யோகம்
யு யுகம் யௌ யௌவனம்

வகர மெய்யெழுத்து:

’வ்’ என்னும் மெய்யெழுத்து அ, ஆ, இ, ஈ, எ, ஏ, ஐ ஒள ஆகிய எட்டு உயிர் எழுத்துகளுடன் மட்டுமே வரும்.

எ.கா:

ணக்கம் வெ வெள்ளை
வா வாழ்த்து வே வேம்பு
வி விழி வை வைகை
வீ வீடு வௌ வௌவால்