சிகரம்
(முதல் பருவம்)
சொல்லுக்கு (மொழிக்கு) இறுதியில் வரும். அதாவது ஒரு சொல்லில் இறுதி எழுத்தாக இடம்பெறும் எழுத்துகள் மொழியிறுதி எழுத்துகள். மொழியிறுதி எழுத்துகள், அவற்றின் தன்மையைப் பொறுத்து மூன்றாகப் பகுக்கப்பட்டுள்ளன. அவை,
1. மொழிக்கு இறுதியில் வரும் உயிரெழுத்துகள் (உயிரீறு)உயிரெழுத்துகள் பன்னிரண்டும் மொழிக்கு இறுதியில் வரும்.
(எகரக் குறில் அளபெடையாக மட்டும் மொழிக்கு இறுதியில் வரும்)
| அ | பல | எ | எஎ |
| ஆ | பலா | ஏ | தே(தெய்வம், தலவைன்) |
| இ | பனி | ஐ | அன்னை |
| ஈ | தேனீ | ஒ | நொ(துன்பம், நோய்) |
| உ | ஆறு | ஓ | போ |
| ஊ | பூ | ஔ | வௌ(கைப்பற்று, திருடு) |
| பழகு | அழகு |
| மாசு | காசு |
| பட்டு | ஆடு |
| பந்து | சந்து |
| பாம்பு | வேம்பு |
| புற்று | காற்று |
மெய்யெழுத்துகள் வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்று வகைப்படும். இவற்றுள் வல்லின மெய்கள் ஆறும் மொழிக்கு இறுதியில் வருவதில்லை. மெல்லின மெய்யெழுத்துகளில் (ஞ், ண், ந், ம், ன்) ஆகிய ஐந்தும், இடையின எழுத்துகள் (ய், ர், ல், வ், ழ், ள்) ஆறும் ஆகிய பதினொன்றும் மொழிக்கு இறுதியில் வரும்.
| ஞ் | உரிஞ் (உராய்தல்) |
| ண் | மண் |
| ந் | வெரிந்(முதுகு) |
| ம் | அன்னம் |
| ன் | கண்ணன் |
| ய் | தாய் |
| ர் | வேர் |
| ல் | வேல் |
| ழ் | புகழ் |
| ள் | வாள் |
| மொழியிறுதி உயிரெழுத்துகள் | 12 |
| மொழியிறுதி மெய்யெழுத்துகள் | 11 |
| மொழியிறுதி குற்றியலுகரம் | 01 |
| ஆக, மொழியிறுதி எழுத்துகள் மொத்தம் | 24 |