சிகரம்
(முதல் பருவம்)

பாடம் - 5
உயர்நிலைத்திறன் & செயல்திட்டம்

5.9 உயர்நிலைத்திறன்

கீழ்க்காணும் நுண்கதையைப் படித்து, அதற்குப் பொருந்தும் பழமொழியைத் தேர்வுசெய்க.

அன்றுதான் விண்ணப்பம் அனுப்புவதற்கு இறுதி நாள். விண்ணப்பக் கட்டணத்திற்குத் தேவையானதைவிட மிகவும் குறைவாகவே கண்ணனிடத்தில் பணம் இருந்தது. நண்பர்களிடம் கேட்க அவனுக்குத் தயக்கமாக இருந்தது. அதனால் என்ன செய்வது எனத் தெரியாமல் கவலையில் ஆழ்ந்தான் கண்ணன். அப்போது, அவனுடைய தம்பி கபிலன் வந்தான். அண்ணன் கவலையுடன் இருப்பதை அறிந்தான். காரணத்தை அம்மாவிடம் கேட்டு அறிந்துகொண்டான். உடனே அவன் தன் அறைக்குச் சென்றான். பின்னர், கண்ணனிடம் சென்று, தன் கையில் இருந்த சிறு உண்டியலைக் கொடுத்தான். கண்ணன் நிமிர்ந்து பார்த்தான். “அண்ணா, இதில் இருநூறு ரூபாய் சேர்த்து வைத்துள்ளேன். இதை எடுத்துக்கொண்டு, உடனே சென்று விண்ணப்பப் படிவத்தை வாங்குங்கள்” என்றான் கபிலன். கபிலனின் உதவும் பண்பும் அவனது சேமிப்புப் பழக்கமும் தக்க சமயத்தில் கண்ணனுக்குக் கைக்கொடுத்து உதவின. இரு மாதத்திற்குப் பின், தன் முதல் மாதச் சம்பளத்தைக் கொண்டுவந்த கண்ணன் சிறிய அட்டைப்பெட்டி ஒன்றையும் வாங்கிவந்தான். அதில், அழகிய கண்கவர் வீடு போன்ற அமைப்பைக் கொண்ட உண்டியல் இருந்தது. அதனைக் கபிலனுக்குக் கொடுத்து, அவனை மகிழச்செய்தான் கண்ணன்.

மேற்கண்ட நுண்கதைக்குப் பொருத்தமான பழமொழியைத் தேர்ந்தெடுக்க.

1. பணம் பத்தும் செய்யும்
2. சிறு துளி பெருவெள்ளம்
3. பதறிய காரியம் சிதறிப்போகும்

5.10 செயல்திட்டம்

’அ’ என்னும் எழுத்தில் தொடங்கும் பத்து தமிழ்ப் பழமொழிகளை எழுதி வருக.