சிகரம்
(முதல் பருவம்)
தமிழ் பிராமி எழுத்து வடிவம்
தமிழ் பிராமி எழுத்துகளை தமிழி என்றும் பண்டைத் தமிழ் எழுத்துகள் என்றும் அழைத்தனர்.
பத்மஸ்ரீ ஐராவதம் மகாதேவன்
கீழடி அகழாய்வு
குவிரன் ஆத(ன்), ஆதன்
பண்டைய காலத்தில் தமிழகத்தில் பல பெருவழிகள் இருந்துள்ளன. இவை இன்றைய தேசிய நெடுஞ்சாலைகள் போன்று பெருநகரங்களை இணைக்கும் வழிகளாக இருந்தன. எனவே இவை, பெருவழிகள் என அழைக்கப்படுகின்றன. இவற்றுள் மிகப் பெரியதும் பழமையானதுமான பெருவழி கொங்குப்பெருவழியாகும். இந்த நெடுஞ்சாலையானது கொங்குப்பகுதியில் அதிக தூரம் செல்வதால் கொங்குப்பெருவழி என அழைக்கப்படுகிறது. இந்தப் பெருவழியில் பல வணிக மையங்கள் இருந்துள்ளன. அங்கே வெளிநாட்டு வணிகர்கள் பலரும் வந்து வணிகம் செய்துள்ளனர் எனக் கல்வெட்டுச் செய்தி கூறுகின்றது. இப்பெருவழி அரபிக்கடல் பகுதியில் உள்ள பாலக்காட்டையும் வங்காள விரிகுடா பகுதியில் உள்ள பூம்புகாரையும் இணைக்கும் மிக நீண்ட பெருவழி. அதாவது, சேரநாட்டையும் சோழநாட்டையும் இணைக்கும் பெருவழியாகும். இவ்வழியை ஆதித்தசோழன் புனரமைத்தால் இது இராஜகேசரி பெருவழி எனவும் அழைக்கப்படுகிறது. |
|