சிகரம்
(முதல் பருவம்)
இவற்றில் எவை சரியானவை? இத்தகைய சொற்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ‘நலம்‘, ‘நிலம்‘ என வரவேண்டிய சொற்கள், ‘நலன்‘, ‘நிலன்‘ எனவும் வருகின்றன. இவ்வாறு ஒரு சொல்லில் வரவேண்டிய எழுத்துக்கு மாற்றாக வேறோர் எழுத்து மயங்கி வருவதனை ‘எழுத்துப்போலி’ என்கிறோம். இதனால், பொருள் மாற்றம் ஏற்படுவதில்லை. எழுத்துப்போலியில் மூவகை உண்டு. அவை முதற்போலி, இடைப்போலி, இறுதிப்போலி என்பனவாகும். மேலும் முற்றுப்போலி, முன்பின்னாகத் தொக்கபோலி என்பனவும் வழக்கில் உள்ளன.
மொழி முதற்போலி| 1. | பசல் | – | பைசல் |
| 2. | மஞ்சு | – | மைஞ்சு |
| 3. | மயல் | – | மையல் |
மேற்கண்ட எடுத்துக்காட்டில், வண்ணமிட்ட எழுத்துகளில் உள்ள சொற்கள் எழுத்துப்போலிகள். மொழிமுதல் எழுத்தான ‘ப‘ எழுத்துக்கு, ‘பை‘ என்பது போலி. இவ்வாறே, ‘ம‘ எழுத்துக்கு ‘மை‘ என்பது போலி. மொழி இடையில் சகரம், ஞகரம், யகரம் ஆகிய எழுத்துகள் வரும் போதுதான் இத்தகைய எழுத்துப்போலிகள் வருகின்றன.
மொழி முதற்போலி| 1. | அமச்சு | – | அமைச்சு |
| 2. | இலஞ்சி | – | இலைஞ்சி |
| 3. | அரயர் | – | அரையர் |
மேற்கண்ட எடுத்துக்காட்டில், வண்ணமிட்ட எழுத்துகளில் உள்ள சொற்கள் எழுத்துப்போலிகள். இங்கு, எழுத்து மாற்றங்கள் மொழிக்கு இடையில் வந்துள்ளன.
மொழி இறுதிப்போலி| 1. | அகம் | – | அகன் |
| 2. | பந்தல் | – | பந்தர் |
| 3. | சாம்பல் | – | சாம்பர் |
மேற்கண்ட சொற்களில் வண்ணமிட்ட எழுத்துகள் கொண்டவை எழுத்துப்போலிகள். இவை சொல்லின் இறுதியில் வந்துள்ளன. இதனால், பொருள் மாற்றம் ஏற்படுவதில்லை
முற்றுப்போலி| 1. | ஐந்து | – | அஞ்சு |
மேற்கண்ட எடுத்துக்காட்டில், வண்ணமிட்ட எழுத்துகளில் உள்ள சொல் எழுத்துப்போலிகள்.
இவ்வாறு ஒரு மொழியில் உள்ள முதல், இடை, கடை ஆகிய மூன்று எழுத்துகளும் மாறுபட்டு வந்தும் பொருள் மாறாமல் இருந்தால் அது முற்றுப்போலி எனப்படும்.
முன்பின்னாகத் தொக்கபோலி| 1. | கால்வாய் | – | வாய்க்கால் |
| 2. | தசை | – | சதை |
மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் சொல்லின் பகுதிகள் முன்பின்னாக மாறியும் பொருள் மாறாமல் இருக்கின்றன. எனவே, இது முன்பின்னாகத் தொக்கபோலி என அழைக்கப்படுகிறது .