சிகரம்
(முதல் பருவம்)
பனைமரம் தமிழ்நாட்டின் மாநில மரம். பனைமரம் ஏழு ஆண்டுகளில் பலன் தரும். பனைமரம் ஏழைகளின் கற்பக விருட்சம் என்று அழைக்கப்படுகிறது; சிறந்த காற்றுத் தடுப்பான். ஆழத்தில் நீர்மட்டம் குறையாமல் நீரைச் சேமித்துவைக்கும் தன்மையுடையது. இதனால் நிலத்தடி நீர்மட்டத்தைத் தக்கவைக்கிறது. பனைமரம் வளரும் வரைதான் நீர் தேவை, வளர்ந்துவிட்டால் பெரிய அளவுக்குத் தண்ணீர் தேவையில்லை. பனைமரத்திலிருந்து நுங்கு, பதநீர், கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்றவை கிடைக்கும்.
இயற்கையைப் பாதுகாக்க இயற்கையே உருவாக்கிய ஓர் அரணே பனைமரம். இது வெப்ப நிலப்பரப்பில் வளரக்கூடிய மரம். இது ஏறத்தாழ 120 ஆண்டுகள் வரை வளரும். இது புல் வகையைச் சார்ந்த தாவரம். தமிழ்நாட்டில் 30 வகையான பனைமரங்கள் இருந்தன என்று ஆய்வுகள் கூறுகின்றன.
பனையின் இலை ‘ஓலை’ எனப்படுகிறது. இது, கூரைகள் வேயப் பயன்படுகிறது. மேலும் பனையோலையால்தான் ஓலைச்சுவடிகள் உருவாக்கப்பட்டன. இவ்வோலைச்சுவடிகளே பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் இலக்கியங்களைச் சுமந்துவந்து நம்மிடம் சேர்த்தன.
சங்க இலக்கிய காலம் முதலே பனைமரம் போற்றப்பட்டுள்ளது. சேர மன்னனின் அடையாளப் பூவாகப் பனம்பூ இருந்துள்ளது. மறைந்த குமரிக்கண்டத்தில் பனைநாடு இருந்தது எனத் தமிழ் நூல்கள் கூறுகின்றன. பனையூர், பனைமங்கலம், பனையபுரம், திருப்பனந்தாள், பனைமரத்துப்பட்டி எனப் பனையின் பெயரில் தமிழ்நாட்டில் ஊர்ப்பெயர்கள் பல உள்ளன. இவ்வாறு தமிழர்களின் வாழ்க்கையோடு பனைமரம் ஒன்றிக் காணப்படுகிறது.
பனைமரம்
30
பனைமரத்திலிருந்து நுங்கு, பதநீர், கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்றவை கிடைக்கும்.
பனைமரம் தமிழர்களின் வாழ்க்கையோடு ஒன்றிக் காணப்படுகிறது.
பனைநாடு குமரிக்கண்டத்தில் இருந்தது.